மாணவ முதல்வர்களால் தாக்கப்பட்ட சிறுவன் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதி..!

0

முல்லைத்தீவு பிரபல பாடசாலை ஒன்றில் 8இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவன் ஒருவன் உயர் வகுப்பு மாணவர்களால் தாக்கப்பட்ட நிலையில் யாழ் பேதனா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

கடந்த 03.09.2020 அன்று தரம் 08இல் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவன் ஒருவனை பாடசாலைக்குள் வைத்து தரம் 10 இல் கல்வி கற்கும் மற்றும் மாணவ முதல்வர்கள் மூவர் இணைந்து குறித்த மாணவன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.


பாடசாலை விட்டு இயலாத நிலையில் வீடு சென்ற மாணவன் தனது தாயாருக்க நிலமையினை சொல்லி உடல் நிலை இயலாமல் போக தாயார் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் சம்பவம் குறித்து பாடசாலை அதிபருக்கும் முள்ளியவளை பொலீசாருக்கும் முறையிட்டுள்ளார்.

குறித்த மாணவனின் உடல் நிலை மிகவும் மோசமாக காணப்பட்டுள்ளதை தொடர்ந்து மாணவன் யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.


உயர் வகுப்பு மாணவர்களின் தாக்குதலுக்கு உள்ளான குறித்த மாணவனின் நிலை தொடர்பில் எவரும் கண்டு கொள்ளாத நிலையில் கடந்த 08 ஆம் திகதியில் இருந்து 10 ம் திகதி வரை மாணவன் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் கல்விசார் திணைக்களங்கள் எடுக்காத நிலையும் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறையிட்டும் பொலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை காணப்படுவதாக மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளதுடன்.


பாடசாலைகளில் நடைபெறும் இவ்வாறான செயற்பாடுகளை பாடசாலை நிர்வாகம் கண்டிக்கத் தவறுவதால் பாதிக்கப்பட்ட மாணவர்களக் உளநல பாதிப்பிற்கு உள்ளாகும் அபாய நிலையில் காணப்படுகின்றார்கள்

பாதிக்கப்பட்ட மாணவன் பாடசாலை செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.