தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளராக தவராசா வருவதை வடகிழக்கு மக்கள் விரும்புகின்றனர்..!

0

கடந்த 6 வருடமாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து, இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ள திரு துரைராஜசிங்கம் அவர்கள், மக்களிற்காக செய்த சேவையை பாராட்டி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

கடந்த பொதுத் தேர்தலிலும் மற்றும் தமிழரசுக் கட்சியின் உட் கட்சி போரினாலும், தற்பொழுது பலம் இழந்து கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியை, பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டுமாயின், வடக்கு கிழக்கு மாகாணம் மற்றும் தென் இலங்கைத் தமிழ் மக்களின் அன்பையும் பெற்றவரும் கடந்த 50 வருடமாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகவும் இருக்கும், சட்டத்தரணி தவராசா அவர்களே சரியான தெரிவாகும்.


வடக்கில் பிறந்து, தனது சட்டத் தொழிலுக்காக கொழும்பில் வாழ்ந்து கொண்டு, வடக்கு கிழக்கு மாகாண பல தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, சட்ட ரீதியில் போராடி அவர்களை வெளிக் கொண்டு வந்தவரும் மற்றும் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றம் செல்ல வேண்டியவர்.


அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதித்துவம் பறி போன போது, அம்பாறை மாவட்டத்திற்கு அந்த தேசிய பட்டியலை கொடுக்கும் போது, பெரும் தன்மையோடு கட்சிக்குள் எந்த சிக்கலும் கொடுக்காது, அம்பாறை மாவட்டத்திற்கு அதை கொடுத்ததை, முழு மனதோடு ஏற்றுக் கொண்டவரும் மற்றும் கிழக்கு மாகாண மக்களையும் நேசிக்கக் கூடியவர்.


இப்படி எல்லோராலும் மதிக்கக் கூடிய நேர்மையாகவும் சமநீதியில் நின்று, எல்லோரையும் அரவணைத்து அன்போடு மக்களிற்காக குரல் கொடுக்கக் கூடிய, சட்ட நுட்பங்கள் நன்கு அறிந்த சட்ட மேதையான தவராசா அவர்களை, தமிழரசுக் கட்சியின் புதிய “பொதுச் செயலாளராக” தெரிவு செய்வதே சிறப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.