ஊர்காவற்றுறை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி கௌரவ A. யூட்சன் அவர்கள் எதிர்கால சந்ததி பயனடையும் உயர் நோக்கில் தனது நீதி நிர்வாகப் பிரதேசத்தில் 650 மரங்களை நாட்டி சாதனை படைத்துள்ளார்.
இந்நிகழ்வு கடற்படை மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் தீவகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
முன்மாதிரியான செயற்பாட்டில் ஈடுபட்ட நீதிபதிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.