முல்லையில் விக்டர் குழு உறுப்பினர் ஒருவர் அதிரடிக் கைது..!

0

முல்லைத்தீவு பிரதேசத்தில் இயங்கி வந்த விக்டர் குழுவின் பிரபல உறுப்பினர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த விக்டர் குழு தொடர்பில் பொலிசார் கூடுதல் அவதானம் செலுத்தியிருந்தனர்.


மக்கள் மத்தியில் காணப்படும் ஒழுக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் செயற்பட்டுவந்த குறித்த குழுவின் பிரபல உறுப்பினர் ஒருவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.


முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


முல்லைத்தீவு தண்ணீருற்று முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான குறித்த சந்தேக நபர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.