விக்கியின் உரைகள் தமிழினத்தை மீண்டும் படுகுழியில் தள்ளும்; முன்னணி அந்தர் பல்டி..!

0

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரைகள் தமிழ் இனத்தை மீண்டும் படுகுழியில் தள்ளும் செயற்பாடாகத் தோன்றுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எச்சரித்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவியான வாசுகி சுதாகர் தனது முகநூல் பதிவில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.


அவர் தனது பதிவில் “ஏதோ தான் ஒரு நீண்டகால தமிழ்த் தேசிய அரசியல் போராட்டவாதி போலும், விடுதலைப் போரில் போராட்டம் நடத்திய போராளி போலும் தன்னை புதிதாகப் பூதாகாரப்படுத்தி, தனது வாழ்வியலில் சம்பந்தப்படாத புலிப் போராட்டம், முள்ளிவாய்க்கால், தமிழர் தேசம் என்றெல்லாம் நாடாளுமன்றத்துள் பந்தா காட்டி, மீண்டும் தமிழினத்தை படுகுழியில் தள்ள ஏதோ பூடகமாய் மொழிவதாக தோன்றுகின்றது அவரது புதிய அரசியல் நாடக அத்தியாயம்.” என்று அவர் அப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


வாசுகி சுதாகரின் இந்த கருத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை வரதராஜன் பார்த்தீபன், ஈழத்தின் பிரபல இயக்குநர் கேசவராஜன் உட்பட பலர் தங்கள் கண்டனங்களை பதிவிட்டுள்ளனர்.

இதேவேளை ஒரு நாடு இரு தேசம் என்றும் முஸ்லீம்கள் விரும்பினால் மூன்று தேசமாக மாற்றுவோம் என்றும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை குத்தகைக்கு எடுத்தது போல் செயற்படும் முன்னணி,


விக்னேஸ்வரனின் தமிழரின் இருப்பு, பாரம்பரியம் தொடர்பிலான விஞ்ஞான பூர்வமான கருத்துக்கள் ஒட்டு மொத்த இலங்கையையே சிந்திக்க வைத்துள்ள நிலையில் பேரினவாதிகளை திருப்திப்படுத்தும் வகையிலான கருத்துக்களை முன்னணி தெரிவித்துள்ளமை ஆனது முன்னணி யாரின் நிகழ்ச்சி நிரலில், யாரை திருப்திப்படுத்த முனைவதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.