தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில் தமிழ் தேசிய இளைஞர் பேரவை எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சி உறுப்புரிமையில் இருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளரென நேற்றைய தினம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மணிவண்ணனை தலைமை இணைப்பாளராக கொண்டு தமிழ் தேசிய இளைஞர் பேரவை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செயற்பாடு எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் முன்னணியின் வாக்கு வங்கியை பெரிதும் பாதிக்கும் எனக் கருதப்படுகின்றது.