அணில் ஒன்றை காண்பிப்பதாக 12 வயதான சிறுமி துஸ்பிரயோகம்; இராணுவ சிப்பாய் கைது..!

0

வீட்டில் வளர்க்கும் அணில் ஒன்றை காண்பிப்பதாக கூறி, 12 வயதான சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய் ஒருவரை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலப்பிட்டிய பதில் நீதவான் லுஷான் வடுதந்திர இன்று உத்தரவிட்டுள்ளார்.

விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த இந்த இராணுவச் சிப்பாயை மீட்டியாகொட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி இருந்தனர்.


முல்லைத்தீவு இராணுவ முகாமில் கடமையாற்றும் பெரலிய தெல்வத்தை மிதிகஸ்துடுவ பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராணுவச் சிப்பாயே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


தெல்வத்தை தியபோட்டிய பிரதேசத்தை சேர்ந்த 12 வயதான பாடசாலை மாணவி தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் கற்றலுக்கு தேவையான காதிதங்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வழியில் இருந்த சந்தேக நபர், அணிலை காட்டுவதாக வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.


சம்பவம் நடக்கும் போது சந்தேக நபரின் வீட்டில் எவரும் இருக்கவில்லை என மீட்டியாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் அவரது வீட்டில் இருந்த போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.