சாரதிகளுக்கு எச்சரிக்கை; இன்று முதல் மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை..!

0

நடை பாதையில் வாகனங்களை நிறுத்தி வைப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் தேவையற்ற விபத்துக்கள் ஏற்படுகிறது எனவும்,

முறையற்ற விதத்தில் நடை பாதைகளில் வாகனங்களை நிறுத்துவதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங் கொடுக்க நேரிடுகிறது எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.