வவுனியா பட்டக்காடு பகுதியில் பல்கலை கழக மாணவி மீது துஸ்பிரயோக முயற்சி..!

0

வவுனியா பட்டக்காடு பகுதியில் வீடு ஒன்றில் தங்கியிருந்து கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த பல்கலைக் கழக மாணவி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட்ட வீட்டு உரிமையாளர் நையப் புடைக்கப்பட்டார்.

கடந்த வெள்ளிக் கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தின் போது, மாணவி கூக்குரலிட்டதை அடுத்து, அயலவர்கள் ஒன்று கூடி, வீட்டு உரிமையாளரான 51 வயதுடைய நபரை அடித்து துவைத்துள்ளனர்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

பட்டக்காடு பள்ளிவாசலுக்கு அருகில் வசித்து வரும் 51 வயதுடைய வாடகை வீட்டின் உரிமையாளர் பல்கலைக் கழத்தில் பயின்று வரும் மாணவி ஒருவரை கடந்த மூன்று மாதங்களாக தனது வீட்டிற்கு அருகிலுள்ள தனது பிறிதொரு வீட்டில் வாடகைக்குத் தங்க வைத்துள்ளார் .

கடந்த வெள்ளிக் கிழமை இரவு 10.30 மணியளவில் குறித்த மாணவி தங்கியிருந்த அறைக்குள் சென்று மாணவி மீது துஷ்பிரயோக நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்துள்ளார் .


சம்பவம் இடம் பெறவுள்ளதை உணர்ந்து கொண்டு மாணவி சத்தமிட்டுள்ளார். இதையடுத்து அயலவர்கள் அங்கு சென்று மாணவியை காப்பாற்றியதுடன், வீட்டு உரிமையாளரை நையப்புடைத்து, அங்கிருந்து விரட்டியுள்ளனர்.


குறித்த நபர் அப்பகுதியில் நீண்ட காலமாக இரண்டு மனைவிகள் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.