காணாமல் போன மாடுகள் இறைச்சிக்காக சோயா வீதிக்கு பறந்து வந்த அதிசயம்; ஒருவர் கைது..!

0

வவுனியா நெளுக்குளம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன மாடுகள் வவுனியா நகரில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த நிலையில் நேற்று (24.08.2020) மாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெளுக்குளம் பகுதியில் மாடு காணாமல் போன நிலையில் மாட்டின் உரிமையாளர் தேடி வந்துள்ளார். இந் நிலையில் அவரின் மாடு வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட சோயா வீதியில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மாட்டின் உரிமையாளர் அங்கு சென்று இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த மாடுகளை பார்வையிட்டுள்ளார்.இதன் போது அங்கு காணாமல் போன மாடு காணப்பட்டுள்ளது. அதனையடுத்து மாட்டின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த மாட்டினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.


காணாமல் போன மாட்டினை இறைச்சிக்காக மாடு அறுக்கும் தொழுவத்திற்கு வழங்கிய குற்றச்சாட்டில் பட்டக்காடு 6ம் ஒழுங்கையினை சேர்ந்த 29வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பொலிசாரின் பாதுகாப்பையும், வீதிச் சோதனைகளையும் மீறி பறந்தா? யாழ்- கண்டி வீதியில் அமைந்துள்ள மாடறுக்கும் தொழுவத்திற்கு மாடுகள் கொண்டு வரப்பட்டன. இவ்வாறு பாதுகாப்பு பலவீனமான நிலையிலா தற்போதய ஆட்சி உள்ளது? 


இதேவேளை வவுனியாவில் தமிழர்களின் கால்நடைகள் களவாடப் படுகின்றமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில் கால்நடைகள் சில அரசியல்வாதிகளின் பின்புலத்தில் இயங்கும் முகவர்களால் கடத்தப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.