எவரும் தப்பிக்கவே முடியாது; நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் எச்சரிக்கை..!

0

ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக் கூறுதலில் இருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் கொள்கை விளக்கவுரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


தொடர்ந்தும் பேசிய அவர்,

நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டுமெனும் ஆணையை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

நாட்டில் இரண்டு தேசங்கள் உள்ளன. இதனால் தமிழ் மக்களுக்கு சமமான அந்தஸ்த்தும் உரிமைகளும் அவசியமாகும்.


அரசமைப்பு மாற்றங்களில் எங்கள் தனித்துவமான, சுயநிர்ணய உரிமைகளை அரசு அங்கிகரிக்க வேண்டும்.

இதேவேளை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறப்பட வேண்டும்.


உலகின் எந்த நாடும் இறைமையின் பின்னால் மறைந்திருந்து கொண்டு பொறுப்புக் கூறுதலில் இருந்து தப்பிக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.