பாடசாலைகளில் கற்பித்தல் நடைபெறும் நேரங்களில் மீண்டும் மாற்றம்..!

0

கொரோனா அச்சுறுத்தலையடுத்து நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் பகுதி அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் சில வகுப்புகளுக்கான நேர அட்டவணைகள் வழமைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தரம் 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இடம் பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இதுவரை காலமும் தரம் 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இடம் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.