சிறுமியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்த இரு முதியவர்கள் கைது..!

0

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த சிறுமி கடைக்கு சென்ற போது, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட மொரவெவ பொலிஸார் 69 வயதுடைய கடை உரிமையாளரையும், 50 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிய வருகின்றது.


மஹதிவுல்வெவ, தெவனிபியவர பகுதியை சேர்ந்த 69 வயதுடைய கே.எம். ஜினதாஷ மற்றும் 50 வயதுடைய ஏ.எச்.ஏ. நிமால் ஜயவர்தன ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.