வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிசேகம்-2020

0

அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில்,

அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித
புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண நவ (9) குண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் – 2020

(சார்வரி மீ ஆவணி 12ம் நாள் (28.08.2020) வெள்ளிக்கிழமை காலை 6.05 – 7.28)
சிவநேய செல்வர்களே!

இயற்கை எழில் சூழ்ந்து நீர்வளம், நிலவளம், கனிவளம், மலைவளம் என இயற்கை வளங்களும் தன்னகத்தே கொண்டு விளங்கும் ஆசியா கண்டத்தின் இந்து சமுத்திரத்தின் முத்தென திகழ்கின்றதும் திருமூல நாயனாரால் சிவபூமி எனப் போற்றப்பட்டதும்,பஞ்ச ஈச்சரங்களை தன்னகத்தே கொண்டு விளங்கும் இலங்காபுரியில் ஆறாவதாகப் போற்றப்படுகின்ற வவுனியா – கோவில்குளம் எனும் திவ்ய சேத்திரத்தில் காசியில் இருந்து எழுந்தருளி அடியவர்களின் மனக்குறையினை அகற்றி இடர்களைந்து இன்னல்கள் தீர்த்து சித்திகள் அருளும் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் நாற்திசைகளிலும், புதிதாக அமைக்கப்பட்ட அதிசுந்தர இராஜகோபுரங்களுக்கும் விநாயகர் முதல் சண்டேஸ்வரர் வரையான மூர்த்திகளுக்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் பெருமானுக்கும் நிகழும் சார்வரி வருடம் ஆவணி 12ம் நாள் (28.08.2020) வெள்ளிக்கிழமை மூலநட்சத்திரமும் தசமி திதியும் அமிர்த சித்தயோகமும் கூடிய காலை 6.05 மணிமுதல் 7.28 மணி வரையுள்ள சிங்க லக்கின சுபமுகூர்த்தவேளையில் வேத, ஆகம முறைப்படி பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் நடைபெற இறைவன் திருவருள் கைகூடியுள்ளது.

எனவே சிவநேய செல்வர்கள் அனைவரும். கும்பாபிஷேக கிரியைகளையும், பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகத்தையும் கண்குளிர கண்டு இறை பணிபுரிந்து, தொண்டுகள் புரிந்து இம்மை பயன்களை பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

❤❤❤பிரதிஷ்டா கிரியாகால நிகழ்வுகள்❤❤❤

ஆவணி 4ம் நாள் 20.08.2020 வியாழக்கிழமை காலை 9மணிக்கு

பிரதிஷ்டா குருமார்கள் ஆலயத்துக்கு அழைத்து வரப்படல். காலை 9.05 மணிக்கு மேல் 10 மணிக்குள் வரும் சுக்கிர ஹோரையில் பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேக கிரியாரம்பம் விநாயகர் வழிபாடு, பிரதிஷ்டா சங்கற்பம், வருண பூஜை, ஜபம், தேவப்ராமண, அநுஞ்ஞை , சுவாமிகள் அநுஞ்ஞை , தனபூஜை, திரவிய சுத்தி, திரவிய விபாகம், முகூர்த்தப் பத்திரிகா படனம், திரவிய சலார்ச்சனம். மாலை 5 மணி விநாயகர் வழிபாடு, யந்திர பூஜை, பேரீதாடனம்

ஆவணிம் 5ம் நாள் 21.08.2020 வெள்ளிக்கிழமை காலை 7மணி முதல்

வித்யா கணபதி வழிபாடு, வருண பூஜை, ஸ்ரீமஹா கணபதி வழிபாடு, தனாகர்ஷன லக்ஷ்மி ஹோமம், பிரம்மசாரி பூஜை, விநாயகர் அகவல் பாராயணம். மாலை 5 மணி முதல் சங்கடஹர கணபதி வழிபாடு, வருண பூஜை, யந்திர பூஜை, கிராமசாந்தி, பிரவேசபலி, அஷ்டபலி ஆவணிம்

6ம் நாள் 22.08.2020 சனிக்கிழமை காலை 7 மணி முதல்

பாலகணபதி வழிபாடு, வருண பூஜை, நவக்கிரக மகம், மூர்த்தி ஹோமம், கோளறு பதிகம் பாராயணம். மாலை 5மணி முதல் விநாயகர் வழிபாடு, வருண பூஜை, யந்திர பூஜை, திஷா ஹோமம், ரக்ஷோக்ன ஹோமம்.

ஆவணிம் 7ம் நாள் 23.08.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7மணி முதல்

விநாயகர் வழிபாடு, வருண பூஜை, யந்திர பூஜை பூர்த்தி, சம்ஹிதா மந்திர ஹோமம், சிவபுராண பாராயணம். மாலை 5மணி முதல் விநாயகர் வழிபாடு, வருண பூஜை, உத்தமபக்ஷ்மண்டூக பத வாஸ்து சாந்தி.

ஆவணி 8ம் நாள் 24.08.2020 திங்கட்கிழமை காலை 7 மணி முதல்

கணபதி வழிபாடு வருண பூஜை, கங்கா தேவி பிரதிஷ்டை, கோபூஜை, சூர்யாக்னி, சங்கிரணம். காலை 9.05 மணிமுதல் 9.45 மணிக்குள், தூபிஸ்தானம், சிற்பிகள் சம்பாவனை. மாலை 3 மணி முதல் கணபதி வழிபாடு, வருண பூஜை, பூமி பூஜை, மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், ஆச்சார்ய மூர்த்திபர்கள் ரஷ்சபந்தணம், நித்திய துவஜாரோகணம், பிரசன்னாபிஷேகம், பிரசன்ன பூஜை, கடஸ்தாபனம், கலாகர்ஷணம், அக்னி உத்பவம், நவாக்னி, பஞ்சாக்னி விபஜனம், பிரதான கும்பங்கள், மந்திரயாகசாலா பிரவேசம், ஹோமங்கள் பூர்ணாகுதி, தீபாராதனை, திருவருட்பிரசாதம் வழங்கல். மாலை 6.08 மணிமுதல் 8.02 மணிக்குள் தீபயந்திர, பிம்பஸ்தாபனம், அஷ்ஷபந்தனம்

ஆவணி 9ம் நாள் 25.08.2020 செவ்வாய்க்கிழமை காலை முதல் 27.08.2020 வியாழக்கிழமை காலை வரை

கணபதி வழிபாடு, வருண பூஜை, விஷேட சந்தி, பூதசுத்தி, தர்மத்துஜை பூஜை, யாகசாலா பிரவேசம், யாக பூஜை, பாவனாபிஷேகம், ஸ்தாலிபாகம், நவாக்னி, பஞ்சாக்னி பூஜை, திரவ்ய ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, வேத, ஸ்தோத்திர திருமுறை பராயணம், தாளவாத்ய உபசாரங்கள், திருவருட் பிரசாதம் வழங்கல்.

26.08.2020 புதன்கிழமை காலை 8மணிமுதல் – 27.08.2020 வியாழக்கிழமை மாலை 3 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.

ஆவணி 11ம் நாள் 27.08.2020 வியாழக்கிழமை மாலை 4 மணி முதல்

விநாயகர் வழிபாடு, வருண பூஜை, பஞ்சகவ்ய, பஞ்சாமிர்த பூஜை, சோடஷ கலச விம்பசுத்தி பூஜை, யாகசாலா பிரவேசம், யாக பூஜை, கர்ப்பக்கிரக துவார பூஜை, கௌதூக பந்தனம், பூர்வசந்தானம், நவாக்னி, பஞ்சாக்னி பூஜை, பச்சிம சந்தானம், பூர்ணாகுதி, தீபாராதனை, வேத ஸ்தோத்திர திருமுறை பாராயணம், தாள வாத்திய உபசாரங்கள், நாட்டிய சமர்ப்பணம், திருவருட் பிரசாதம் வழங்கல்.

ஆவணி 12ம் நாள் 28.08.2020 வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி முதல்

  • விநாயகர் வழிபாடு, வருண பூஜை, பூத சுத்தி, யாகசாலா பிரவேசம், யாக பூஜை, நவாக்னி, பஞ்சாக்னி பூஜை, பூர்ணாகுதி சோடச உபசார சமர்ப்பணம், மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, பிரதட்சிண, நமஸ்காரம், சதுர்வேதபாராயணம், உபநிஷத் பாராயணம் சிவாகம சுலோக பாராயணம், திருமுறை பாராயணம், கீத வாத்ய நாதாஞ்சலி சமர்ப்பணம், ஆசீர்வாதம், பலிகள் தானாதிகள், சர்வ மங்கள. வாத்திய சகிதம் பிரதான கும்பங்கள் புறப்பாடு காலை 6.05 நிமிடத்தில் ஸ்தூபிகள் கும்பாபிஷேகம், தொடர்ந்து இராஜ கோபுரங்கள், கும்பாபிஷேகம், சுந்தர இராஜ கோபுர கபாட பூஜை, துவார புஸ்பாஞ்சலி, பிரதான கும்பம் மூலாலய பிரவேஷம், லஜாங்க ஆவாஹணம், ப்ராண பிரதிஷ்டை, காலை 7.28 மணிக்குள் வரும் சிங்கலக்ன சுபவேளையில் விநாயகர் முதல் சண்டேஸ்வரர் வரையான மூர்த்திகளுக்கும், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகிலாண்டேசுவரர் சுவாமிக்கும் மஹா கும்பாபிஷேகம், மஹா கவிர் நிவேதனம், ஸ்திராகுதி, எஜமான் அபிஷேகம், தசமங்கள தர்சனம், திருக்கதவம் திறத்தல், கும்பாபிஷேக பல சமர்ப்பணம், சிவாச்சார்ய கௌரவம், மங்கள ஆசீர்வாதம், ஆசியுரைகள், மஹா அபிஷேகம், தீபாராதனை திருவருட் பிரசாதம் வழங்கல். மாலை 4 மணி முதல் சாயரட்சை பூஜை, திருக்கல்யாண உற்சவம், பஞ்சமுகார்ச்சனை, UI சுவாமி திருவீதியுலா நடைபெறும்.

சிவஸ்ரீ கி.சதாசிவ குருக்கள்
ஆகம பிரவீணா சமஸ்கிருத பண்டிதர்
மட்டுவில் – வவுனியா
சிவஸ்ரீ கைலை வாமதேவ குருக்கள்
ஆதீன குருமணி,
ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் – நயினாதீவு

பிரம்மஸ்ரீ ச.பத்மநாப சர்மா
சிரேஷ்ட விரிவுரையாளர் – சமஸ்கிருதம்,
யாழ் பல்கலைக்கழகம்
முன்னேஸ்வரம் – நல்லூர்

சிவாகம சிரோமணி
சிவஸ்ரீ க.ச.சோமஸ்கந்த குருக்கள்
பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவில்

வேதாகம மாமணி
சிவஸ்ரீ சோ. இரவிசந்திர குருக்கள்
ஆதீன கர்த்தா – பிரதமகுரு திருமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோவில்

வேதாகம கிரியாதத்துவநிதி
சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாதக் குருக்கள்
நந்தாவில் நாகபூஷணி அம்மன் கோவில் இறம்பைக்குளம் வவுனியா.

பிரதிஷ்டா பிரதம குருமணி “சாகித்ய சிரோமணி”, “சிவாகம பாஸ்கரன்”, “நயினை குருமணி”
சிவஸ்ரீ வை.மு. பரம முத்துக்குமாரசாமி குருக்கள் நயினை ஆதீன பிரதம குருமணி, ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில்
நயினாதீவு – வடகோவை

ஆலய பிரதம குருமணி
“வேதாகம கிரியா கலாநிதி”, “சக்தி உபாசகர்”
சிவஸ்ரீ சதா சங்கரதாஸ் குருக்கள்
(கோவில்குளம்- புங்கிடுதீவு)
சிவஸ்ரீ ச.விவேந் குருக்கள்

🏛🏛ஆலய குருமார்கள்🏛🏛
பிரம்மஸ்ரீ அ சுந்தரராஜ சர்மா
பிரம்மஸ்ரீ ச. பாலமுரளி சர்மா
பிரம்மஸ்ரீ இராகுல சர்மா

மூர்த்திய குருமணிகள்
சிவஸ்ரீ. ப.மு. பாலகுமார குருக்கள் – நயினை – வடகோவை
சிவஸ்ரீ. ப.மு. குருபர குருக்கள் – வடகோவை
சிவஸ்ரீ.மு.ப சண்முகராஜக்குருக்கள் – வடகோவை
சிவஸ்ரீ. மு.ப குருநாத குருக்கள் – வடகோவை
சிவஸ்ரீ. மு.ப. பாலசுப்பிரமணியக்குருக்கள் – வடகோவை
சிவஸ்ரீ. வே சரண்ய புரீஸ்வர குருக்கள் – வவுனியா
சிவஸ்ரீ. ப கணேச ராஜகுருக்கள் – நல்லூர்
சிவஸ்ரீ. தி சக்திதர குருக்கள – வவுனியா
சிவஸ்ரீ. பா. கிருஷ்ணகுமார குருக்கள் – வவுனியா
சிவஸ்ரீ. நா. பிரபாகரக் குருக்கள் – வவுனியா
சிவஸ்ரீ. சி. சிவகுமாரக் குருக்கள் – கல்வியங்காடு
சிவஸ்ரீ. ந. கேசவன் குருக்கள் – வவுனியா
சிவஸ்ரீ. சோம கிரிதரக் குருக்கள் – வவுனியா
சிவஸ்ரீ. தி. குணாதரக் குருக்கள் – வவுனியா
சிவஸ்ரீ. உ. சிவகுமார குருக்கள் – வவுனியா
சிவஸ்ரீ. யோ. ஞானேஸ்வரக் குருக்கள் – வவுனியா

சாதகாசிரியர்கள்
சிவஸ்ரீ.ந. பிரசாந்த குருக்கள் – வட்டுக்கோட்டை
சிவஸ்ரீ. பால. கணேஸ்வரக் குருக்கள் – ஆதீன குருமணி, நயினாதீவு பிரம்மஸ்ரீ ச. கௌரிசங்கர சர்மா – வடகோவை
பிரம்மஸ்ரீ வெ. கஜராஜ சர்மா – வட்டுக்கோட்டை
பிரம்மஸ்ரீ கே. சுதாகரன் சர்மா – வவுனியா

யாகசம்ரக்ஷ்கர்
பிரம்மஸ்ரீ S. சுஜீவ சர்மா – காரைநகர்
பிரம்மஸ்ரீ இ. கோபிநாத சர்மா – கல்வியன்காடு
பிரம்மஸ்ரீ உமாபாலா சர்மா – கண்டி
பிரம்மஸ்ரீ பா. சதீஸ்வர சர்மா – வடகோவை
பிரம்மஸ்ரீ நிரோசன் சர்மா – உரும்பிராய்
பிரம்மஸ்ரீ ராகேஸ் சர்மா – கொழும்பு
பிரம்மஸ்ரீ ல. சோமநாத சர்மா – சித்தங்கேணி
பிரம்மஸ்ரீ N. சிந்துஜ சர்மா – சித்தங்கேணி
பிரம்மஸ்ரீ ஸ்ரீ. அம்பிகநாத சர்மா – உரும்பிராய்
பிரம்மஸ்ரீ சி. ஸ்ரீதர சர்மா – சுன்னாகம்

ஸ்வயம்பாகி
பிரம்மஸ்ரீ சிவா சர்மா – கதிர்காமம்
பிரம்மஸ்ரீ ஜனார்த்தன் சர்மா

தகவல்:

ஆலய அறங்காவலர்களும் கும்பாபிசேக குழுவினரும்