10வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து தலைமறைவான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது..!

0

உறவு முறையில் மகள் முறையான சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கடமையிலிருந்து இடை நிறுத்தப்பட்டு 4 வருடங்களாக தலைமறைவாகியிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மொனராகலைப் பொலிசார் இன்று (13) கைது செய்துள்ளனர்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பெண் சட்டத்தரணியொருவரை திருமணம் செய்து பின்னர் அவரை விவாகரத்து செய்த நிலையில் அப் பெண் சட்டத்தரணியின் சகோதரியின் பத்து வயது மகளை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.


இது குறித்து மொனராகலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றியைடுத்து, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள்ளை கைது செய்ய முயன்றும் அந் நபர் தலைமறைவாகி இருந்ததினால் உடன் கைது செய்ய முடியாமல் போயுள்ளது.

இக் குற்றச் செயல் குறித்து பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற ஆதாரப் பூர்வமான முறைப்பாட்டின் பேரில் பொலிஸ் திணைக்களத்தினால் அந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கையினையடுத்து, அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார்.


மேலும் மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வந்த நடவடிக்கையில் நான்கு வருடங்களுக்குப் பின்னர் மாற்று பெயர் மற்றும் மாற்று வேடத்திலிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று கைது செய்யப்பட்டார்.

அவர் விசாரணையின் பின்னர், மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக மொனராகலைப் பொலிசார் தெரிவித்தனர்.