தனது இரண்டு மகள்களை துஷ்பிரயோகம் செய்த தந்தை தலைமறைவு..!

0

தனது இரண்டு மகள்களை துஷ்பிரயோகம் செய்ததாக தந்தையொருவர் மீது புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபரை கைது செய்ய பேருவளை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடற்றொழிலாளியான கறித்த நபரின் மனைவி வெளிநாட்டில் வசிக்கிறார். மூன்று பிள்ளைகளும் தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்தனர்.


16, 14 வயதான இரண்டு மகள்களையே இவர் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் 16 வயது சிறுமி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 14 வயது சிறுமி பொலிசாரின் பாதுகாப்பில் உள்ளார்.


சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை பொலிசார் தேடி வருகின்றனர்.