வன்னியில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ரிஷாட் பதியூதீன் முதலிடம்..!

0

வன்னி மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ரிஷாட் பதியூதீன் முதலிடத்தில் உள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட அவர் 28,203 வாக்குகுளை பெற்றுள்ளார். இதன் மூலம் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை தக்க வைத்துள்ளது.


இதேவேளை வன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அதன் படி சார்ல்ஸ் நிர்மலநாதன் (25,668), செல்வம் அடைக்கலநாதன் (18,563), எஸ். வினோ (15,180) ஆகியோர் தமக்கான ஆசனங்களை தக்க வைத்துள்ளனர்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு ஆசனத்தைதையும் (காதர் மஸ்தான் – 13,454), ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒரு ஆசனத்தையும் ( குலசிங்கம் திலீபன் – 3,203) தக்க வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.