பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகும் சுரேன் ராகவன்..!

0

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் 17 தேசியப் பட்டியல் ஆசனங்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், அக் கட்சியினால் தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


இதில் வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.