தமிழரசுக் கட்சியின் 8 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆசனத்தை இழந்தனர்..!

0

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் சரவணபவன் ஆகியோர் யாழ் மாவட்டத்தில் தோல்வியடைந்தார்.

இதேவேளை கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் மட்டக்களப்பில் தோல்வியடைந்தார்.


அத்துடன் வன்னி மாவட்டத்தில் சிவமோகன் மற்றும் சாந்தி சிறீஸ்கந்த ராசாவும் தோல்வியடைந்தனர்.

மேலும் அம்பாறையில் கோடீஸ்வரனும் தோல்வியை தழுவியுள்ளனர். கடந்த 2015 தேர்தலில் 16 ஆசனங்களைப் பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 ஆசனங்களையே பெற்றுள்ளது.


இதேவேளை கூட்டமைப்பின் மீதான மக்களின் வெறுப்பு, அதிக அளவிலான சுயேட்சைக் குழுவினரின் தாக்கம், கூட்டமைப்பின் பங்காளிகளுக்கு இடையிலான ஒற்றுமையீனம் போன்ற விடயங்கள் தேர்தலில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது எனலாம்.