2/3 பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராக பதவியேற்கும் மகிந்த..!

0

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ பிரதமராக மீண்டும் எதிர்வரும் 9ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

இதேவேளை புதிய அமைச்சரவை எதிர்வரும் 10 அல்லது 11ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக அந்த கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.


145 ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ள பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கு இன்னும் 6 ஆசனங்களே தேவையாகவுள்ளது.

வடக்கில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்துள்ள ஒரு ஆசனம் , ஈ.பி.டி.பிக்கு கிடைத்துள்ள 2 ஆசனங்கள் அடங்கலாக இது வரையில் 148 ஆசனங்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கவுள்ளது.


இதன்படி இன்னும் 2 ஆசனங்களே தேவையாகவுள்ள நிலையில் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் , எங்கள் சக்தி மக்கள் கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றுக்கு 3 ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில் அந்த கட்சியினர் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எவ்வாறாயினும் திங்கட் கிழமைக்குள் தமக்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.