3000 வாக்குகளுடன் பாராளுமன்ற உறுப்பினரான வன்னி வேட்பாளர்..!

0

நடைபெற்று முடிந்த இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 3 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்ற வேட்பாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.

ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக வன்னி தேர்தல் மாவட்ட வாக்குப் பதிவு இடம் பெற்றிருந்தது.


அதன் அடிப்படையில் எண்ணப்பட்ட வாக்குகளிற்கு அமைவாக தமிழரசுக் கட்சிக்கு 3 ஆசனங்களும், பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் சார்பில் தலா ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவாகியிருந்தனர்.


இந்நிலையில் ஆறாவது ஆசனத்திற்கான வாய்ப்பு 11 ஆயிரத்து 310 வாக்குகளைப் பெற்றிருந்த ஈபிடிபி வசமானது. இதையடுத்து அந்த கட்சி சார்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த குலசிங்கம் திலீபன் பாராளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


அவர் எடுத்த வாக்குகள் 3 ஆயிரத்து 203 ஆகும். இதையடுத்து 9வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களில் மிகக் குறைந்த விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டவர்களில்,

சாள்ஸ் நிமலநாதன் – 25,668 வாக்குகள்

செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்

வினோநோதராதலிங்கம் – 15,190 வாக்குகளையும்

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகளையும்

பொதுஜன பெரமுன சார்பில் காதர் மஸ்தான் – 13,454 வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.