அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம்; பத்து தேர்தல் அதிகாரிகள் அதிரடியாக பணியிலிருந்து நீக்கம்..!

0

அரசியல் கட்சிகள் சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்ட பத்து தேர்தல் அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து நீக்கப்படவுள்ளனர்.

இந்த தகவலை நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.


குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பதிலாக நியமனம் செய்வதற்கு போதுமான அதிகாரிகள் தம்மிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த 10 சிரேஷ்ட தேர்தல் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.