பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சமூகமளிப்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியது..!

0

நாளை ஆரம்பமாகும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்மார் சமூகமளிப்பது தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன்படி 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான ஆசிரியர்கள் மாத்திரமே நாளை முதல் வரும் வாரத்தில் சமூகமளிக்க வேண்டுமெனவும் இதர ஆசிரியர்கள் அனைவரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு பின்னரே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டுமெனவும் கல்வியமைச்சு தகவல்கள் தெரிவித்தன.


ஆசிரியர்களின் சமூகமளிப்பு தொடர்பில் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் வரும் தகவல்களை நம்ப வேண்டாமெனவும் , பாடசாலை அதிபர் அறிவுறுத்தலுக்கு அமைய நடக்குமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டது.