மறு அறிவித்தல் வரை மாணவர்களுக்கு இடையிலான விளையாட்டு பயிற்சிக்கு தடை..!

0

நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் மறு அறிவித்தல் வரும் வரையில் மாணவர்களுக்கு இடையிலான விளையாட்டு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் அச்சம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார்.


எனினும் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாத விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகள் முன்னெடுக்கப்படலாம்.

இதேவேளை தரம் 11, 12 மற்றும் 13 மாணவர்களுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை அடுத்த திங்கட் கிழமை ஆரம்பமாகவுள்ளது. ஏனைய தரங்களுக்கான கல்வி நடவடிக்கை ஆகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்.


காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.