10 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த நபரை தேடும் பொலிஸார்..!

0

புத்தளம் சிரம்பியடி பிரதேசத்தில் 10 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை எதிர் நோக்கும் சந்தேக நபரை கண்டுபிடிக்க பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.


41 வயதான சிமியோன் அலோசியஸ் என்ற சந்தேக நபரை கைது செய்யவே பொலிஸார் இவ்வாறு பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.


சந்தேக நபரின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்த நபர் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால், 119, 071-8591292, 032-2265222,035-2265422 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிய தருமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.