வைத்திய சாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கைது..!

0

முல்லேரியா IDH வைத்திய சாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.


கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்தவரே இவ்வாறு வைத்திய சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


திருகோணமலை சீனன் குடாவைச் சேர்ந்த முகமட் நசீம் என்ற குறித்த சந்தேக நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.