அங்கொட ஐ.டி. எச்சிலிருந்து தப்பி ஓடிய கைதி; மக்களின் உதவியை நாடும் பொலிஸார்..!

0

அங்கொட ஐ.டி.எச். வைத்திய சாலையிலிருந்து கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த கைதியான நோயாளியொருவர் தப்பிச் சென்றுள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார் அவரை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அங்கொட ஐ.டி.எச். வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதைப் பொருளுக்கு அடிமையான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருகோணமலை சீனன் குடா, மாபிள் பீச் ரோட்டைச் சேர்ந்த முகமட் ஹசிம் முகமட் நசீம் என்பவரே அங்கொட வைத்திய சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சந்தேக நபரின் இடது கால் ஊனமுற்ற நிலையிலும், நடைபயிற்சி செய்யும் போது அவரது கால் முடங்கிப் போயுள்ளதாகவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.


சந்தேக நபரை அடையாளம் கண்டால் 0718591017, 0718592290, 0718591864 அல்லது 119 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொண்டு தகவல் தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.