அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

0

அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தின் கடற் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் 7.8 ரிச்டர் அளகோலில் பதிவாகியுள்ளமையினால் குறித்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


உள்ளூர் நேரப்படி புதன் கிழமை காலை 6.12 மணியளவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது 500 மைல் தூரத்திலுள்ள ஏங்கரேஜ் வரை உணரப்பட்டு, பெர்ரிவில்லின் தொலைதூர குடியேற்றத்திற்கு தென்கிழக்கு 60 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.


நிலநடுக்கத்தின் மையப் பகுதியைச் சுற்றியுள்ள 200 மைல் தூரம் சுனாமியின் எச்சரிக்கை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக உண்டான சேத விபரங்கள் குறித்து தகவல் இன்னும் வெளியாவில்லை.