அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவிக்கு பிடியாணை; இறுகும் கோட்டாவின் பிடி..!

0

அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிடியாணையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.


இதேவேளை ஏலவே ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தி குறித்த வழக்கு உட்பட பல வழக்குகளை நீந்து போகச் செய்வதற்கு பலர் முயன்ற போதும் ஜனாதிபதி கோட்டா குறித்த விடயங்களை கணக்கில் எடுக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் விமல் வீரவன்ச அண்மையில் சக கட்சி உறுப்பினர்களுடன் கடிந்து கொண்டார்.


இந்நிலையில் ஊழலுக்கு எதிராக செயற்படும் ஜனாதிபதிக்கு எதிராக மொட்டுக்குள் அதிருப்திக் குழு உருவாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.