போதைப் பொருள் கடத்தல்களில் பல்கலைக் கழக மாணவர்கள்; வெளியான அதிர்ச்சிச் செய்தி..!

0

போதைப் பொருள் கடத்தல் காரர்கள் பல்கலைக் கழக மாணவர்களை பயன்படுத்தி தங்களது பணத்தை , ஈசிகேஸ் முறையினூடாக பறிமாற்றம் செய்து வருவதாக தெரிவித்த மேல் மாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் எவரேனும் இருந்தால் அது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.


பொலிஸ் தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களின் சொத்துகளை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதனால் அதற்கு அச்சம் கொண்டுள்ள இந்த கடத்தல்காரர்கள் மிக சூட்சுமுகமான முறையில் ஈசிகேஸ் முறையூடாக தங்களது பணத்தை பறிமாற்றம் செய்து வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்று பல்கலைக் கழக மாவர்களை இவர்கள் பயப்படுத்தி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.


தொழில் வாய்ப்பு தேடிச் செல்லும் மாணவர்களை கண்டறிந்து , அவர்களுக்கு தொழிலை பெற்றுக் கொடுப்பதாக குறிப்பிட்டு , அவர்களை தனியார் வங்கியொன்றில் கணக்கொன்றை ஆரம்பிக்குமாறு தெரிவித்து விட்டு , தாங்கள் அந்த கணக்கிற்கு பணத்தை வைப்பிலிடுவதாகவும் , பின்னர் அந்த பணத்தை பல்கலைக் கழக மாணவர்களை மீற எடுத்து ஈசிகெஸ் முறை மூலம் தங்களுக்கு அனுப்புமாறு குறிப்பிட்டு , இதனை செய்யும் மாணவர்களுக்கு சிறியளவிலான ஊதியத்தையும் வழங்கி வருகின்றனர்.


இது தொடர்பான விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்பட்ட பல பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன எனத் தெரிவித்தார்.