சகல பாடசாலைகளுக்கும் மேலும் ஒரு வாரம் விஷேட விடுமுறை..!

0

இலங்கை பாடசாலைகளுக்கு ஜூலை 13 முதல் 17 ஆம் திகதிவரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்விடுமுறை மேலும் ஒரு வாரத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது

இதன்படி, 11, 12, 13 ஆம் வகுப்புகள் எதிரவரம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


அத்துடன், க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதி எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை மாணவர்களின் பாதுகாப்பு கருதி இவ் விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ள போதும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் கணிணிக் கல்வி நிலையங்கள் சாதாரணமாக இயங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.