மக்களே அவதானம்; வடக்கின் பல பகுதியில் நாளை (19) மின்சாரம் தடை..!

0

வடக்கின் பல பகுதியில் நாளை (19) ஞாயிற்றுக் கிழமை மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக நாளை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இவ்வாறு மின்சாரம் தடைப்படவுள்ளது.


யாழ் பிரதேசத்தில்

பலாலி வீதி திருநெல்வேலி சந்தியிலிருந்து பலாலி வீதி வேம்படி சந்திவரை, பனிக்கர் லேன், திண்ணை விடுதி, தலங்காவில் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி கொமர்ஷல் வங்கி, தபால் பெட்டி சந்தி, கந்தர்மடம் சந்தி, இலுப்பையடி சந்தி, சிவன் அம்மன் வீதி, அன்னசத்திர வீதி, ஆரியகுளம் சந்தி, அம்மன் வீதி, நாவலர் வீதியில் ரயில் கடவையிலிருந்து அம்பலவாணர் வீதி ஆத்தியடி வரை,

பலாலி வீதி பருத்தித்துறை வீதியிலிருந்து வீரமாகாளி கோவில் வரை, ஆரியகுளம் சந்தியில் இருந்து இராசாவின் தோட்ட சந்தி வரை, கம்பஸ் லேன், திருநெல்வேலி புறப்பட்டி டெவலப்பர்ஸ் பிறைவேற் லிமிட்டட், நெதேர்ன் சென்ரல் வைத்தியசாலை, பிரைட் இன், அவ்னொர் பிரைவேட் லிமிட்டட், டம்ரோ பலாலி வீதி, ஐ.பி.சி தமிழ், பிகாஸ், ஆஸ்பத்திரி வீதி வேம்படி சந்தியிலிருந்து கஸ்தூரியார் வீதி சந்தி வரை,


மகாத்மா வீதி, முனீஸ்வரன் வீதி, கந்த பரசேகரம் வீதி, யாழ் போதனா வைத்தியசாலை, யாழ் போதனா வைத்தியசாலையின் 3 மாடி கட்டிட தொகுதி, கொமர்சல் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி, ரில்கோ விடுதி, யாழ் பல்கலைக் கழக ஆண்கள் விடுதி, யாழ் கார்க்கில்ஸ் பிஎல்சி, அபி கட்டடம்,

யாழ் ஹொட்டல் பிறைவேற் லிமிட்டட், யாழ் மதர் கெயர், பொம்மைவெளி, நாவாந்துறை, முத்தமிழ் வீதி, மீனாட்சிபுரம், பண்ணை சுற்றுவட்ட வீதி, கண்ணகிபுரம், பண்ணை சுகாதார கிராமம், யாழ் சிறைச்சாலை, யாழ் பொலிஸ் நிலையம், துரையப்பா விளையாட்டரங்கு, கோட்டை பிரதேசம் ஆகிய இடங்களிலும்

கிளிநொச்சி பிரதேசத்தில்

இரத்தினபுரத்திலிருந்து இரணைமடு வரை, திருவையாற்றிலிருந்து இரணைமடு வரை, ஜெயந்தி நகர், செல்வா நகர், கனகபுரம், அம்பாள்குளம், உருத்திரபுரம், கோணாவில், ஸ்கந்தபுரம், அம்பலபெருமாள் குளம், அக்கராயன் குளத்திலிருந்து வன்னேரிக்குளம் வரை, ஜெயபுரத்திலிருந்து வலைப்பாடு வரை, பல்லவராயன்கட்டிலிருந்து வெள்ளாங்குளம் வரை, நீதிபுரம், அம்பகாமம், ஒலுமடுவிலிருந்து 3வது மைல் கல் வரையும்,

ஆனந்தபுரம், கிளிநொச்சி வைத்தியசாலை, பாரதிபுரம், கிருஷ்ணபுரம், மலையாளபுரம், அறிவியல்நகர், முறிகண்டி வரையும்


முல்லைத்தீவில்

கற்சிலைமடுவிலிருந்து முத்தையன்கட்டு குளம் வரை, வற்றாப்பளை, மாமுனை, மாஞ்சோலை, ஒட்டுசுட்டான் சந்தியிலிருந்து நெடுங்கேணியூடாக வெடிவைத்தகல் வரை,

மாங்குளம், வன்னிவிளாங்குளம், அம்பாள்புரம், செல்வபுரம், ஒட்டறுத்தகுளம், மூன்றுமுறிப்பு, பாண்டியன்குளம், பொன்நகர், பூவரசங்குளம், விநாயகபுரம், அனிஞ்சியன்குளம், மல்லாவி, யோகபுரம், தேறாங்கண்டல், தெனியங்குளம், துணுக்காய், கல்விளான், கொக்காவில், ஐயங்குளம்


வவுனியாவில்

கருவேலங்கண்டல், குளவிசுட்டான், நயினாமடு, மதியாமடு ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.