வடக்கில் நாளை மின்சாரம் தடைப்படவுள்ள பிரதேசங்கள்..!

0

உயர் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக வடக்கின் பல பகுதிகளில் நாளை (16) மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை,


யாழ் மாவட்டத்தில்

மந்திகை உபயகதிர்காமம், வல்லிபுரம், வல்லிபுரம் தேசியு நீர்ப்பாசனசபை, டொக்யாட் முல்லை ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்படும் என கூறப்பட்டுள்ளது.


வவுனியா மாவட்டத்தில்

தவசிக்குளம் கிராமத்திலும் மின்சாரம் தடைப்படும்.

மன்னார் மாவட்டத்தில்

காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரை சீனத்துறைமுகம், வங்காலை ஒரு பகுதி, முள்ளிக்குளம், தள்ளாடி, கடலேரி வீதி, சாந்திபுரம், தரவன் கோட்டை, தள்ளாடி இராணுவ முகாம், டயலொக தொலைத் தொடர்பு நிலையம், மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் ஆகிய பிரதேசங்களில் மின் துண்டிக்கப்படும் எனவும் மின்சாரசபை அறிவித்துள்ளது.