குறித்த திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு சு.கவின் செயலாளர் தயாசிறி கோரிக்கை..!

0

குறித்த திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று கோரிக்கை விடுத்தார்.

18 , 19 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நிறைவுபெறுமாக இருந்தால், 25 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு அவர் குறிப்பிட்டார்.


இது குறித்து அவர் தெரிவிக்கையில்;

தொடர்ந்தும் பிரச்சினை அதிகரிக்கின்றது. நாம் கூட்டங்களுக்கு செல்கின்றோம். மக்கள் கூட்டங்களுக்கு வருகின்றனர். நாம் மக்களுடன் நடமாடுகின்றோம்.

வேட்பாளர்களில் ஒருவர் அல்லது இருவருக்கு தொற்று ஏற்பட்டால், ஆயிரக்கணக்கானவர்களைத் தனிமைப்படுத்த வேண்டி ஏற்படும். அதன் போது, தேர்தல் அல்ல எதனையும் செய்ய முடியாமல் போகும்.


எனவே, நான் யோசனையொன்றை முன் வைக்கின்றேன். வர்த்தமானியை மாற்றியமைத்து 25 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள் என கூறியுள்ளார்.