யாழ் வைத்திய சாலையில் நடாத்தப்பட்ட கோவிட் பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா..!

0

யாழ் போதனா வைத்திய சாலையில் இன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த தகவலை யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் 125பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்திய சாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.


இதேவேளை நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.