க.பொ.த உயர் தரப் பரீட்சைத் திகதியை மீண்டும் மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டா இணக்கம்..!

0

பாடசாலை மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக க.பொ.த உயர் தரப் பரீட்சைத் திகதியை மீண்டும் மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டபாய இணக்கம் தெரிவித்துள்ளார்.


கண்டியில் நேற்று இடம் பெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்ட ஜனாதிபதியிடம், உயர் தரப் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு பிற்போடுமாறு மாணவர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.


இதற்கு உடனே பதிலளித்த ஜனாதிபதி, இந்த விடயத்தை உடனே கல்வி அமைச்சிடம் கொண்டு போய் சேர்ப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.