தேர்தலை உடன் பிற்போடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ள ரணில்..!

0

ஸ்ரீலங்காவில் மீளவும் கொரோனா தொற்று சடுதியாக அதிகரித்துள்ளதால் தேர்தலை பிற்போடுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தலை பிற்போடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு இறுதி நிமிடம் வரை காத்திருக்கக் கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இறுதி நிமிடம் வரை காத்திருக்காமல் தேர்தலை பிற்போடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ள ரணில் விக்கிரமசிங்க அனைத்து வேட்பாளர்களும் ஏற்கனவே பெருமளவு பணத்தை செலவிட்டுள்ளனர்.

இறுதி நேரத்தில் தேர்தலை பிற்போட்டால் அவர்கள் செலவிட்ட பணம் வீணாகிவிடும் என சுட்டிக் காட்டியுள்ளார்.


இரண்டாவது சுற்று வைரஸ் நிச்சயமாக பொருளாதாரத்தை அழித்து விடும். எனவே வைரஸ் பரவலை கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கை அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.