சமூக வலைத் தளங்களில் போலி பிரசாரங்களை பரப்புவோருக்கு எதிராக வலைவீச்சு..!

0

சமூகவலைத் தளங்கள் ஊடாக போலி பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களை கண்டறிவதற்காக பொலிஸ் ஊடகப் பிரிவு , தகவல் தொழிநுட்ப பிரிவு, குற்றப் புலனாய்வு பிரிவு என்பன சோதனையில் ஈடுப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

போலி பிரசாரங்கள் தொடர்பாக பொலிஸார் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகப் பேச்சாளரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் கூறியதாவது,

சமூகவளைத்தலங்கள் ஊடாக போலிப் பிரசாரங்களை பரப்பி வரும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறான பிரசாரங்களை கட்டுப் படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு போலி பிரசாரங்களை பரப்புபவர்களை இனங் காண்பதற்காக பொலிஸ் ஊடகப்பிரிவு , தகவல் தொழிநுட்ப பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு என்பன மேற்பார்வை செய்து வருகின்றன.


இதன் போது கிடைக்கப் பெறும் தகவல்கள் அனைத்தும் பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு வழங்கப்படும்.

தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் பொலிஸ் ஊடகப் பிரிவு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.


இதுவரையில் போலி பிரசாரங்களை முன்னெடுத்துள்ள சில நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்களை கண்டறிவதற்காக பொலிஸ் கண்காணிப்பு பிரிவினர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.