வவுனியாவிலும் ஒருவருக்கு கொரோனா; குடும்பத்தினர் சுய தனிமைப் படுத்தப்பட்டனர்..!

0

வவுனியாவில் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப் பட்டதால் அவரின் குடும்பத்தினர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வவுனியா மடுக்கந்தையை சேர்ந்த படைச் சிப்பாய் ஒருவர் கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கடமையாற்றுகின்றார்.

அவர் விடுமுறை பெற்று வீடு சென்று மீண்டும் முகாம் திரும்பினார். இந் நிலையில் அவருக்கு PCR பரிசோதனை செய்யப்பட்டத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


இதன் காரணமாக அவர் சார்ந்தவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.