வவுனியாவில் விஷ வாயு தாக்கி இளைஞர் ஒருவர் பலி..!

0

வவுனியா, சேமமடு பகுதியில் மாட்டு சாணத்தின் விசவாயு தாக்கி இளைஞர் ஒருவர் பலியானார். இன்று மதியம் இடம் பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் பல மாதங்களாக குவிக்கப்பட்டிருந்த மாட்டு சாணத்தினை பாரவூர்த்தி ஒன்றில் சிலர் ஏற்றியுள்ளனர்.


இதன் போது சாணத்தை ஏற்றிய இளைஞர் ஒருவர் இளைப்பாறுவதற்காக குறித்த சாணிக் கும்பத்தின் மேல் இருந்துள்ளார்.

இதன் போது மாட்டு கழிவில் இருந்து தாக்கிய விசவாயு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் ஓமந்தை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


அவசர சிகிச்சையளிக்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் மேலதிக சிகிச்சைக்காக குறித்த இளைஞன் வவுனியா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் குறித்த இளைஞன் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்திய சாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவத்தில் எஸ்.ரஞ்சிதகுமார் என்ற 28 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகள முன்னெடுத்துள்ளனர்.