தொடர் அரசாங்க விடுமுறை என பரவும் செய்திகள் உண்மையில்லை..!

0

எதிர்வரும் நாட்களுக்கு அரச விடுமுறை அறிவித்துள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அரச தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், எதிர்வரும் நாட்களில் தொடர் விடுமுறை அறிவித்துள்ளதாக முன்னதாக போலியான தகவல்கள் வெளியாகி இருந்தன.


இந்நிலையில் அதனை தெளிவுபடுத்தும் நோக்கில் அரச தகவல் திணைக்களம் சற்று முன்னர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


இதேவேளை தற்போது பரீட்சார்த்த நடவடிக்கையாக பாடசாலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் அதனை ஒருவாரம் தற்காலிமாக நிறுத்துவது தொடர்பில் உயர் மட்டக் கலந்துரையாடலே இடம்பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.