சுமந்திரனின் பாதுகாப்பு இரண்டு மடங்காக அதிகரிப்பு; அதிர்ச்சியில் யாழ் மக்கள்..!

0

அண்மைய நாட்களில் சுமந்திரன் மீதான மக்கள் ஆதரவுத்தளம் குறைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதனை சரி செய்வதற்கும் மக்கள் மத்தியில் அனுதாபத்தை தேடிக் கொள்வதற்கும் தனக்கு உயிர் அச்சுறுத்தல் எனும் புதுக் கதையை உருவாக்கி அதனுடாக அனுதாபத்தைத் தேட முயற்சியில் ஈடுபட்டுள்ளமை யாழ் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


பாதுகாப்பு தரப்பினரின் கடும் பாதுகாப்பின் மத்தியில் சுமந்திரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுதனால் அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் பலத்த கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதால் மக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுமந்திரன் மீது தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற இருந்ததாகவும் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுமந்திரனுக்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டநிலையில் தற்போதைய அரசாங்கத்திலும் அது இரட்டிப்பாக வழங்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று நடைபெற இருக்கின்ற நிலையில் பல கட்சிகளும் இதில் போட்டியிடுகின்றன.

ஏற்கனவே சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாகவும் அந்த அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதாக தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கைக்கு அமையவும் சுமந்திரனின் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தமிழர் பகுதிக்குள் சகல அரசியல்வாதிகளும் சாதாரணமாக சென்று வரும் நிலையில் கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமந்திரனின் செயற்பாடு பலரையும் முகஞ்சுழிக்க வைத்துள்ளது.

இவ்வாறு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர் ஏன் யாழில் போட்டியிட வேண்டிய அவசியம் உள்ளது? இதனூடாக அரசின் ஏதாவது நிகழ்ச்சி நிரலை நகர்த்துகிறாரோ என பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.