வெலிக்கடை சிறைச் சாலையில் மற்றுமொரு கைதிக்கும் கொரோனா..!

0

வெலிக்கடை சிறைச்சாலையின் மற்றுமொரு சிறைக் கைதியும் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை வைத்திய சாலையில் பணிபுரிந்த இவர் யாருடன் கடந்த சில நாட்களாக பழகினார் என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன.


ஏற்கனவே கைதி ஒருவர் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு அதன் பின்னர் 300ற்கும் மேற்பட்டோர் தொற்றுடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து இந்த கைதி இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இதேவேளை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் கந்தகாடு நிலையத்திலுள்ள புனர்வாழ்வு பெறுபவர்கள் மற்றும் பணியாளர்கள் 338 பேர் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கிடைக்கப் பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் 196 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.