யாழில் கொரோனா அச்சம் காரணமாக சுயதனிமைப் படுத்தப்பட்ட 3 குடும்பங்கள்..!

0

யாழில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப் படுத்தலுக்கு உள்படுத்தப் பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.


கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்குச் சென்று வந்த மூவரின் குடும்பங்களே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


அந்தவகையில் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இரண்டு குடும்பங்களும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரு குடும்பமும் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.


இதேவேளை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்று வரை 252 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.