நாளை வடக்கில் மின்சாரம் தடைப்படவுள்ள பிரதேசங்கள் இவைதான்; மக்களே அவதானம்..!

0

நாளை (11) வடக்கின் பல பகுதிகளில் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக மின்சாரம் தடைப்படவுள்ளது.

இதன் படி நாளை சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்சாரம் தடைப்படும் பிரதேசங்களாக,
யாழ் மாவட்டத்தில்- விளாத்தியடி உரும்பிராய், மருதனார்மடம் விவசாய பண்ணை, அண்ணா பண்ணை, இணுவில் அக்கிலிப்பாய், கொக்கன் வளவு. இணுவில் ஆச்சிரமம், பூவோடை இந்து மயான பிரதேசம், உரும்பிராய், இராச வீதி இருபாலை வீதி, இராச வீதி கோப்பாய், கோப்பாய் கல்வியற் கல்லூரி, கோப்பாய் இராணுவ முகாம், கோப்பாய் கிருஸ்ணன் கோயிலடி, வடலியடைப்பு, தொல்புரம், வழக்கம்பரை, கள்ளவேம்படி, சுழிபுரம், பத்தனை கேணியடி, பிரான்பற்று, பண்டத்தரிப்பு, இடும்பன், சில்லாலை, சாந்தை, மாதகல், காஞ்சிபுரம், யம்புகோள பட்டினம், குசுமாந்ததுறை, காட்டுப்புலம், இளவாலை, பெரிய விளான், மரீசன்கூடல், சேந்தாங்குளம், மெயகண்டான் பாடசாலை, யம்புகோள பட்டின விடுதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதே போல வவுனியா மாவட்டத்தில்- கோவில் குளத்திலிருந்து சிதம்பரபுரம் வரை, வவுனியா நகரம் ஒரு பகுதி, பசார் வீதி 1ஆம் குறுக்குத் தெரு, 2ஆம் குறுக்குத் தெரு, இலுப்பையடி, சூசைப்பிள்ளையார் குளம், ஹொரவப் பொத்தானை வீதி, இறம்பைக்குளம், ஹொட்டல் ஓவியா, எஸ்.வி.ஆர் அரிசி ஆலை, லங்கா அரிசி ஆலை, இராணி அரிசி ஆலை, கிறிஸ்தவகுளம், புளியங்குளம், அரசடிகுளம், காந்திநகர், வாரிக்குட்டியூர், சங்கரபுரம் ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்படும்.
கிளிநொச்சி மாவட்டத்தில்- காலை 9.30 மணியிலிருந்து மதியம் 1 மணி வரையிலும், ஒலுமடு ஒரு பகுதி, சின்னசாளம்பன், மணவாளப்பட்டு முறிப்பு ஆகிய இடங்களிலும் மன்னார் மாவட்டத்தில்- சீனத் துறைமுகம், வங்காலை ஒரு பகுதி, முள்ளிப்பழம், தள்ளாடி, கடலேரி வீதி, சாந்திபுரம், சௌத் பார், தரவன் கோட்டை, தள்ளாடி இராணுவ முகாம், டயலொக் தொலைத் தொடர்பு நிலையம், மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் ஆகிய இடங்களிலும் காலைலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரையிலும் மின்சாரம் தடைப்படும்.
மேலும் மன்னார் பிரதேசத்தில் சிறுநாவற் குளத்திலிருந்து தலை மன்னார் வரை, தலை மன்னார் கடற்படை முகாம், தலை மன்னார் பல்மேரா ஹவுஸ், கூல்மென் ஐஸ் தொழிற்சாலை, அந்தோனிப்பிள்ள ஐஸ் தொழிற்சாலை, பேசாலை ஐஸ் தொழிற்சாலை, வங்காலை ஐஸ் தொழிற்சாலை, பல்மைரா ஹவுஸ் கரைசல், எருக்கலம்பிட்டி நீர்ப்பாசன சபை, நியூசில்க் ரோட், தோட்டவெளிடு ரிமெக்ஸ் ஆடைத் தொழிற்சாலை, இன்டஸ்ரியட் எஸ்ரேட், மன்னார் வைத்திய சாலை, ஆவேமரியா ஐஸ் தொழிற்சாலை, கீரி ஐஸ் தொழிற்சாலை, இலங்கை போக்குவரத்துச் சபை, மன்னார் நீர்ப்பாசன திணைக்களம், இலங்கை தொலைத்தொடர்பு நிலையம், அரச அதிபர் அலுவலகம், பூட் சிற்றி, தள்ளாடி இரணுவ முகாம், டயலொக் தொலைத் தொடர்பு நிலையம், மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் ஆகிய பிரதேசங்களில் காலை 6 மணியிலிருந்து மாலை 3 மணி வரையான காலப் பகுதியில் காலையில் 2 மணித்தியாலங்களும் பிற்பகலில் இரண்டு மணித்தியாலங்களும் மின்சாரம் தடைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.