புத்தளம் முந்தல் வைத்திய சாலையில் இளைஞர் உயிரிழப்பு; கொரோனா என சந்தேகம்..!

0

புத்தளம் முந்தல் வைத்திய சாலையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் பின்னர் சிலாபம் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


20 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று முற்பகல் இவ்வாறு உயிரிழந்திருப்பதாக முந்தல் வைத்திய சாலையின் பிரதான மருத்துவர் மகாலிங்கம் பாஸ்கரன் தெரிவித்தார்.


இந்நிலையில் தற்போது உயிரிழந்தவரது இரத்த மாதிரி பி.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.