தமிழரை பீ தமிழர் என பொது நிகழ்வில் தெரிவித்த மஸ்தானின் இணைப்பாளர்..!

0

அண்மையில் வவுனியாவில் நடபெற்ற பொது நிகழ்வு ஒன்றில் இரு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் முற்றியதால் அங்கு இரு தரப்பினரும் முரண்பட்டுள்ளனர்.

அங்கு முரண்பட்ட சமூக ஆர்வலர் (சிறி) ஒருவர் மஸ்தானை நோக்கி ” நீங்கள் இனவாதமாக செயற்படுகிறீர்கள்; நீங்கள் கடந்த ஐந்து வருடத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கதைத்ததை விட கடந்த ஒரு வருடத்தில் ஏப்ரல் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய சந்தேக நபர்களை காப்பாற்ற அதிகம் பாடுபடுகிறீர்கள் எனத் தெரிவித்திருந்தார்.


அதனைத் தொடர்ந்து கடந்த காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்பட்ட ஸ்ரீடெலோ மற்றும் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கு இடையே கருத்து மோதல் வெடித்தது.

இங்கு முரண்பட்ட மஸ்தானின் இணைப்பாளர் ஒருவர் தமிழரை பீ தமிழர் எனவும், தமிழர்கள் மஸ்தானை கடவுளாக தலையில் வைத்து வணங்குவதாகவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அங்கு வருகை தந்திருந்த ஸ்ரீடெலோ இளைஞர்கள் மற்றும் வருகை தந்திருந்த சமூக ஆர்வலர்கள் குறித்த தரப்பினருடன் முரண்பட்டுள்ளனர்.


இதில் பிரபல தமிழ் மில் வர்த்தகர் ஒருவர் குறித்த அரசியல்வாதிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த போது, குறித்த தரப்பினர்களுடன் முரண்பட்டுள்ளார். இதன் போது தான் தனது பிள்ளைகளை முஸ்லீம்களுக்கு திருமணம் செய்து வைப்பேன் எனவும் தெரிவித்தார்.

குறித்த சம்பவங்கள் நடைபெற்ற போது அமைதியாக அவதானித்துக் கொண்டிருந்த மஸ்தான் ஏற்பாட்டுக் குழுவினருடன் முரண்பட்டு வெளியேறியிருந்தார்.

குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கடந்த காலத்தில் தமிழர்களின் ஆதரவுடனேயே பாராளுமன்றம் சென்றவர் என்பதுடன்; அவரின் முன் நிலையிலேயே தமிழரை பீத்தமிழர் என்று கூறியதை ஏற்க முடியாது என்பதுடன் அதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன்,


குறித்த கருத்தாடல் நிகழ்விற்கு மாற்று இனத்தவரை அழைத்து குழப்பங்களை உருவாக்கியது ஏன் என ஏற்பாட்டுக் குழுவினரிடம் கேள்வி எழுப்புகின்றோம்

எனவே குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்பதுடன் குறித்த நபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

அரசியலில் முரண்பாடுகள் வருவதில் ஆச்சர்யம் இல்லை எனினும் வெளிப்படுத்தும் சொற்களை அவதானமாகக் கையாள வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்.


எனினும் குறித்த சம்பவத்தால் ஒட்டு மொத்த தமிழ் சமூகமே வேதனை அடைந்துள்ளதுடன் இன்று வரை மெளனமாக கடந்து செல்ல முயல்வதை மீண்டும் கண்டிப்பதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழ் மக்கள் தமது ஆதரவை நீக்கிக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம்.