முன்னாள் பிரதி அமைச்சர் அமீரலி உட்பட பலரின் தேர்தல் மோசடி அம்பலம்..!

0

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பாக இலக்கம் 2ல் போட்டியிடும் வேட்பாளர் கணேசன் சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியுடன் இணைந்து அவரது வெற்றிக்காக செயற்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினாலும் அவரின் தலைவராலும், வடகிழக்கில் தேர்தலில் போட்டியிடும் முஸ்லீம், சிங்கள அரசியல்வாதிகளாலும் மட்டக்களப்பு, வன்னி உட்பட பல பிரதேசங்களில் தமிழ், முஸ்லீம், சிங்கள வேட்பாளர்களைக் கொண்ட சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.


இவைகள் வாங்கிய பணத்திற்கு விசுவாசமாக தமிழரின் வாக்கை உடைக்கும் கைங்காரியங்களில் ஈடுபடுவதுடன் சமூகத்தில் ஓரளவு அந்தஸ்தில் உள்ளவர்கள் இறுதி நேரங்களில் கட்சி தாவுவது போன்ற மாயையை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கி தமிழர்களை குழப்ப நிலைக்குள் உட்படுத்தி அவர்களின் வாக்குகளை கபளீகரம் செய்யும் பணிகளை திறம்பட மேற்கொள்கின்றனர்.

இதற்காக ஒவ்வொரு சுயட்சைக் குழுக்களுக்கும் சுமார் ஒரு மில்லியன் வரை விலை பேசுகின்றனர். அவர்களும் இறுதிக் கணம் வரை தமிழ் தேசியம் பேசியபடி தமிழ் கட்சிகளை பலவீனப்படுத்தி அதனூடாக பேரினவாதிகளதும், மாற்று இனத்தவர்களினதும் மறைமுக மற்றும் நேரடி நிகழ்ச்சி நிரலில் சிக்குண்டு தமிழரை ஏதிலிகளாக்கும் பணியை திறம்பட மேற்கொள்கின்றனர்.


இவர்கள் ஒருபோதும் கட்சிகளைப் பதிவு செய்ய மாட்டார்கள் என்பதுடன் தேர்தல் திருவிழா நிறைவடைய தமது கடைகளை மூடிச் செல்வார்கள்.

அந்த வகையில் மட்டக்களப்பில் களமிறக்கப்பட்டவரே ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பாக இலக்கம் 2ல் போட்டியிடும் வேட்பாளர் கணேசன் சுரேஷ் என்பவராவார்.

இதேவேளை இம்முறை வன்னியில் போட்டியிடும் 27 சுயேட்சைக் குழுக்களில் சுமார் 20 வரையானவை இவ்வாறு களமிறக்கப் பட்டவையாகும்.

எனவே தமிழ் மக்கள் அதிலும் குறிப்பாக வன்னி, மட்டக்களப்பு மக்கள் அவ்வாறான சதிவலைகளில் சிக்காது எம் இனத்தவரையே தெரிவு செய்ய முன்வர வேண்டும்.அதேவேளை கடந்த ஏப்ரல் குண்டு வெடிப்பின் பின்னர் இலங்கையின் அரசியலே முற்றாக மாறியுள்ள நிலையில் முஸ்லீம், சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதால் அபிவிருத்தியோ, வேலைவாய்ப்போ வரப்போவதில்லை என்ற நியாயபூர்வமான உண்மையை உணர்ந்து வாக்களிப்பை மேற்கொள்ளுங்கள்.

அத்துடன் நீங்கள் தேர்தலை புறக்கணிப்பீர்களாயின் உங்களை பொருத்தமற்றவர்கள் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு ஆள வழி ஏற்படும், அந்த ஐந்து வருடம் நிறைவடையும் போது தமிழர் இனப்பரம்பலே மாறியிருக்கும் அவல நிலை ஏற்படும் என்பதையும் உணர்ந்து செயற்படுங்கள்.


அதேவேளை தேர்தல் விதிகளை மீறி இவ்வாறு கட்சி தாவுபர்களையும், கட்சி மாறி பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.
என்றும்
பிரசாந்த்
(சமூக ஆர்வலர்)