யாழ் மரியன்னை தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர் கைது..!

0

யாழ் ஆயர் இல்லத்திற்கு அருகில் உள்ள புனித மரியன்னை தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மன்னார் பேசாலை வெற்றிமாதா ஆலயத்திற்குள் ஒரு மர்ம நபர் நுழைந்து, அதன் பின்னர் தலைமறைவாகியிருந்த நிலையில், வடக்கில் தேவாலயங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில், சற்று நேரத்தின் முன்னர் தேவாலயத்திற்குள் நுழைந்த சந்தேகப்படும் விதமாக நடமாடிய ஒருவர் யாழில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.