தமிழ் கூட்டமைப்பைப் போல் பிறக்காத குழந்தையே மக்கள் முன்னணி..!

0

கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தமிழர் விரோத செயற்பாடுகளை சுட்டிக் காட்டுவதனூடாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியெனும் கவர்ச்சிகரமான பெயருடன் மாற்றரசியலை முன்றுத்தி வருகின்றவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம்.


தமிழ் தேசிய மக்கள் முன்னணியெனும் மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வரை அதன் தன்மை பழுதுபடாது நோக்கம் சிதைஞ்சு போகாது கட்டிக் காக்கப்பட்டு வந்துள்ளது என்றே கூறவேண்டும். அதனால்தான் அந்த மக்கள் இயக்கத்தின்பால் மக்களும் அதீத தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் இளையவர்களும் ஆர்வம் கொண்டிருந்தனர் .

ஆனால் முன்னணியின் தலைவராகவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயளாளராகவும் இரட்டிப்பு பதவியை தன்னகத்தே வைத்திருக்கும் கயேந்திரகுமாரது பதவி வெறிக்கு தமிழ்த் தேசியத்தை பலிக்கடாவாக்கும் கோரச் செயலைச் செய்து அதனூடாக தனது அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காகவும் தனது தொடர் அரசியல் தோல்வியை வெற்றியாக மாற்றும் நோக்கோடும் செயற்பட்டு வரும் சுயநலவாதியாவார்.


இவர் கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பதிவு செய்வதாக உறுதி மொழிகளை வழங்கியிருந்த போதும் அதனை செய்து முடிக்கும் எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை .

குடும்ப கட்சியான கொங்கிரஸை முன் நகர்த்தும் கயேந்திரகுமாரது தற்கால வெளிப்படையான திடீர் நகர்வுகளுக்கு/ பொதுவெளி அறிக்கைகளுக்கு எந்தவிதமான விளக்க அறிக்கைகளையும் வெளியிடாது கனத்த அமைதி காப்பதனூடாக முன்னணி பதிவு செய்யப்படும் அது மக்கள் இயக்கமாக மாற்றம் பெறும் எதிர்பார்த்து கட்சியில் பணியாற்றியவர்களுக்கு நம்பிக்கைத் துரோகத்தை இழைத்து தனி மனித அரசியலை மேற்கொண்டு வருகின்றார்.

தனது அரசியல் இருப்பை அடைவதற்காகவும் தனது பல கோடி சோத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும் எந்த நிலைக்கும் இறங்கத் தயாரான இவர் ஒரு வேளை தேர்தல் வெற்றியொன்றினை பெற்றால் (சாத்தியமற்றது) தனது எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக எந்த நிலைக்கும் சென்று தமிழ்த் தேசியத்தை விற்க துணிவார் என்பதே யதார்த்தம்.


இந்த வேளையில் கூட்டமைப்பிள்ளோர் சரியானவர்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை மாற்றணியிலுள்ளோரை சரியானவர்களாக அடையாளப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

அந்த கடைமையை சரிவர செய்யும் பொருட்டு தவறானவர்களை ,தவறான நோக்கம் கொண்டோரை ,சுயநலவாதிகளை இனம் காட்டுகின்றோம் .

எனவே குறிப்பிட்ட இவர் பேச்சளவில் தமிழ்த் தேசியமும் செயவடிவில் சுயநலமுமாகவே செயற்பட்டு வருகின்றார்.

இவர்களை போன்றோரை தேர்தலில் வெற்றி பெற வைப்பதானது தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் மக்களுக்கு ஆபத்தானது இவர்களை தோற்கடிப்பதனூடாக இவர்களோடுள்ள மணிவண்ணன் போன்ற இன நலவாதிகளை வெற்றி பெறவைத்து சுயநலத்திற்கும் ,குடும்ப, பரம்பரை தலைமைத்துவ அரசியலுக்கும் முற்றுப் புள்ளி வைத்து புதியதோர் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் அதுதான் தமிழ்த் தேசியதின் எதிர்கால இருப்பை உறுதி செய்யும்.


இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பதிவு செய்வதற்கு தடையாகவுள்ள காரணிகளாக;

பொன்னம்பலம் குடும்பத்தின் சொத்தாகவுள்ள கட்சியை கைவிடத் தயாரில்லை என்பதோடு அதன் தலைமையை யாரிடமும் கொடுக்கவும் தயாரில்லை .

அதேபோல அதில் பொதுச் செயலாளராகவுள்ள கயேந்திரகுமார் இன்னொரு கட்சியில் அதேபோல் உயர் பதவியில் இருப்பதற்கு இலங்கை சட்டம் இடம் கொடுக்கவில்லை.


முன்னணியின் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கவும் தயாரில்லாத பதவி வெறியர்களை தமிழ்த் தேசிய அரசியல் களம் புறக்கணிக்க வேண்டும் அதுதான் ஆரோக்கியமான அரசியலாகவும் அமையும்.

கூட்டமைப்பு பதியப்படவில்லையென குறை கூறும் இவர்கள் முன்னணியை பதிவு செய்வதை உறுதி செய்யவில்லை என்பது “ஊருக்கு உபதேசம் உனக்கில்லை” என்ற மனநிலை போன்றதே…!